Sirpiyin Naragam (The Sculptor's Hell) written by Pudumaippittan, who is considered a pioneer of modern short story in Tamil. First published in the magazine Manikodi on August 25, 1935, the story is set in Kaveripoompattinam, an erstwhile port city in Tamil Nadu in the 11th century CE and revolves around Saathan, a sculptor who has just completed a life-sized Nataraja idol.
Phylarkkas, a Greek who was in town for business, had come to know Saathan through an unnamed Hindu hermit, who was a common friend. And Phylarkkas, on seeing the beautiful idol, is unhappy that Saathan is planning to dedicate it to the temple. He says that if the idol is kept inside the sanctum sanctorum of a temple in darkness, no one is going to appreciate its philosophy of God and the beauty of art.
Pudhumaipithan was one of the most influential and revolutionary writers of tamil fiction. His works were characterized by social satire, progressive thinking and outspoken criticism of accepted conventions. Pudumaipithan is primarily known for his short stories. Of the 108 stories that have been identified as works of Pudumaipithan, only 48 had been published in book form during his lifetime. Most of his works were published in magazines.
Among this luminous group of short story writers, the one who achieved pre-eminence and the one considered by many critics as the writer who broke free from past Tamil tradition and stereotyped formalism is Puthumaippiththan. In the beginning, his stories were neither appreciated nor understood by many readers because of the newness of his technique.
நடன நாடகமாக புதுமைப்பித்தனின்
சிற்பியின் நரகம்
சாத்தன் ஒரு சிற்பத்தினைச் செதுக்குகின்றான். பல காலமாய் மெனக்கெட்டு அழகியலும் கலைத்துவமும் அர்த்தசிருஸ்டியுமுடையதாக அச்சிற்பம் படைக்கப்படுகிறது. தனது உச்சக் கலைப்படைப்பான நடராஜர் சிற்பத்தை தனது நண்பர்கான பைலாக்கஸ் மற்றும் சாமியார் இருவரிடமும் காண்பிக்கிறான். நடராஜர் சிற்பத்தைப் பற்றி விளக்கும் போது இந்தப் பிரபஞ்சம் என்பது வெற்று வெளியல்ல. மனிதர்களுக்குத் தெரியவேண்டியதெல்லாம் ‘அண்டவெளியெங்குமுள்ள ஆட்டமே. அண்டவெளி ஆட்டமே கூத்து’ என தனது படைப்பிற்கு விளக்கமளிக்கிறான்.
இந்தச் சிற்பப் படைப்பு முடிவடையும்போது சாத்தனுக்கு வயது எண்பது. ஆனால் தனது இருபதாவது வயதிலிருந்தே தன் அனுபவங்களையெல்லாம் திரட்டி இந்தப் படைப்பினைச் செதுக்கி முடித்திருந்தான். மக்கள் தனது படைப்பை கலைத்துவ உணர்வுடனும், அதன் உள்ளார்ந்த அர்த்தப்பெறுமதியுடனும் பார்ப்பர் என்ற பெருவிருப்புடன் தன் படைப்பின் உச்சமான ஆடலரசனின் சிற்பத்தை அரசனின் கோவிலுக்குத் தான் அனுப்பப் போவதாக சாத்தன் அறிவிக்கின்றான்.
பைலாக்கஸ் சயக் கருத்துக்களை மறுப்பவன். மனித விழுமியங்களை முன்னிறுத்துபவன். கடவுள் மறுப்பாளன். சாத்தனின் கூற்றைக் கேட்டதும் இது அசட்டுத்தனம் என்றும், அரசனின் கோவிலுக்கு பதில் அரசனின் அந்தப்புறத்துக்கு அனுப்பினாற்கூட அர்த்தமுண்டு. அல்லது உடைத்து எறிந்தாலும் அதற்கு அர்த்தமுண்டு என்றும் கோபங்கொள்கிறான்.
கோவிலின் மூலஸ்தானத்தில் இச்சிற்பத்தை வைத்தால், இருட்டில் அதன் பொலிவையும் அதன் கருத்தையும் இழந்து வெறும் மோட்சம் தரும் சிலையாகிவிடும் என்பது பைலாக்ஸின் கருத்து.
அகண்டவெளியும், அந்தப் புன்சிரிப்பும், தாளத்தோடு நடனமும், அவனது படைப்பும் அதன் உயிரும் அவனது மனதில் எழுகின்றன. அந்த எண்ணத்தோடே மகிழ்ச்சியோடு கோவிலின் கதவைத் திறக்கின்றான். கோவிலினுள் இருள். சூனியம் போலக் கனத்த இருட்டு.
இக்கதையின் நேரடியான உட்பொருளும் பிரதிபலிப்பும் நடராஜர் சிற்பக் படைப்பின் பின்னால் உள்ள அதன் கலையை அழகை பொருளை தத்துவத்தை விளங்கிக்கொள்வில்லை என்பது. படிமங்களாலான இந்தக் கதை, கலைப்படைப்புகள் தொடர்பான பரந்துபட்ட ஆழமான பிரதிபலிப்பினையும் கொண்டுள்ளது. ஒரு உன்னதமான கலைப்படைப்பிற்கான அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு மெனக்கெடல் என்பதை ஒரு கோணத்திலும் அந்தப் படைப்பின் கலைத்துவ அழகியலையும் அது வெளிப்படுத்தி நிற்கும் கருத்தியலையும் தத்துவத்தையும் உணரத் தலைப்படாத போக்கினையும் பொதுத்தன்மையுடனும் பிரதிபலிக்கின்றது.
Sirpiyin Naragam
Short story: Pudhumai Pittan
Choreography: Kavita Laxmi
Music : Gomathi Nayagam
Lyrics - Padmadevan
Performed by Students of KalaSaadhana & Sivathas
Copyrights - KalaSaadhana
Video: Vanan, Mahan, Indran
Year: 2017
created with
WordPress Website Builder .