There have been countless aesthetic thoughts and art-related concepts in Tamil culture, with a rich heritage spanning over 2,000 years. The ancient Tamil grammar text, Tholkappiyam, which beautifully depicts the human way of existence and expressions of the mind, serves as a prime example of this.
The legacy of Tamil thought and art is deeply rooted in the structure and theoretical aspects of the Tamil language. It is vital that we explore these roots to gain a deeper understanding and appreciation of Tamil arts and culture.
Unfortunately, many treasures unique to Tamil heritage have vanished over time. We have lost centuries without thoroughly searching for and reviving many of our intellectual legacies and artistic treasures. As a result, we find ourselves tied not only to borrowed languages but also to borrowed thoughts and beliefs. It is essential to invoke freedom of thought across all platforms and ensure that the essence of Tamil heritage is preserved and celebrated.
‘Natampuri’ – Tamil medium dance serves as an introduction to our Tamil legacy of thought, aesthetic language, and artistry. In our upcoming posts, we will explore hand gestures, movements, theories, historical facts, and philosophical views related to Tamil medium dance.
We are proud to present this unique dance course based on Tholkappiyam, Koothanool, Panchamarabu, and several other ancient Tamil texts, now available in video format.
With Love
Kavitha Laxmi
தமிழர் மரபில் தனித்துவமான அழகியற் சிந்தனைகளும், கலைச்சொற்களும் இருந்திருக்கின்றன. இவைகளுக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு. மனித இயங்கியலையும் மனதின் வெளிப்பாட்டினையும் எடுத்துரைக்கும் தொல்காப்பியத்தை இதற்கு மிகச்சிறந்த சான்றாகச் சொல்லமுடியும்.
தமிழ்ச் சிந்தனைமரபும், கலை சார்ந்த கோட்பாடுகளும் அதன் கட்டுமானம் மற்றும் கருத்தியல் சார்ந்து அவைகளின் வேர்வரை சென்று ஆழமாக ஆய்ந்திடும் தன்மையைக் கொண்டவை. அவைகளை நாம் ஆழத்தோடு விளங்கிக்கொண்டு செயற்படுவது மிக முக்கியமானதாகும்.
தமிழர்களுடைய தனித்துவமான பல கருவூலங்கள் காலத்தால் அடிபட்டுப் போயின. எமது சிந்தனை மரபுகளை, கலைக் கருவூலங்களை நாம் தேடாமலும் நடைமுறைப்படுத்தாமலும் பல நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டோம். அதன்பயனாய், மொழிகளை மட்டுமின்றி கடன் பெற்றுக்கொண்ட சிந்தனைகளின் மூலமும் கட்டுண்டு கிடக்கிறோம். இந்தச் சிந்தனை அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுதல் எல்லாத் தளங்களிலும் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.
நடம்புரி – ‘தமிழ்வழி ஆடல்’ எனும் படைப்பாக்கத் திட்டத்தின் மூலம் நம் தமிழ் மரபின் வழி வந்த சிந்தனையை, சொற்களை, அழகியலை, கலைத்துவத்தை அறிமுகம் செய்ய விழைகின்றோம்.
இப்பதிவுகளின் வழியாக தமிழ் வழி நாட்டியத்திற்குரிய கைகள், அசைவுகள், மெய்ப்பாடுகள், கோட்பாடுகள், வரலாற்றுப் போக்குகள், தத்ததுவார்த்த சிந்தனைகள் ஆகியவை தொடர்பாகப் பேசவுள்ளோம்.
தொல்காப்பியம், கூத்த நூல், பஞ்சமரபு, சிலப்பதிகாரம் மற்றும் பல தமிழ் நூல்களின் வழி - இப்பாடத் திட்டத்தினை ஒளி-ஒலி வடிவத்தினூடாக உங்களுக்கு அளிப்பதில் நாம் பெருமிதம் அடைகிறோம்.
கவிதா லட்சுமி.
created with
Website Builder Software .