A play about oppression and injustice against humanity with a focus on the caste system.
Norwegian Tamils are a minority who immigrated to Norway from Sri Lanka for approx. 30 years ago. Most are Hindus and Christians, and there are also few Muslims. All religions in Sri Lanka practice the caste system.
Casting system is a taboo topic among Norwegian Tamils, but it has also been practiced in Norwegian-Tamil society.
This is a societal problem that can create major consequences. We see that it is not only the first generation who practice this, but also those who were born and raised in Norway. Some are forced to follow the caste system by the environment around them. The choice of friendships, groups, communities, parties and marriages is affected by this.
Our motivation was to shed light on this and clarify how dangerous it can be for both society and individuals.
Parai attam is a special type of dance in Tamil culture where people beat the parai drum and dance to their own rhythm.
This is one of the oldest traditional dances. Nowadays, parai is connected to the caste system and is used by the so-called lowest caste.
பறை
மனிதத்தின் குரல்
பல்வேறு வடிவங்களிலான ஒடுக்குமுறைகளுக்கு மனித சமுதாயம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஒடுக்குவோர் அதிகார மையங்களாகவும்- ஒடுக்கப்படுவோர் உரிமைக்காகவும் சமூக நீதிக்கானதுமான குரலை எழுப்புபவர்களாகவும் இருக்கின்றனர். நீதிக்கும் அநீதிக்குமிடையிலான போராட்டம் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
அநீதிகள் தலையெடுக்கும் போதெல்லாம்..அறத்திற்கான குரல் எழுந்து எதிர்த்துக் கொண்டே இருக்குமென்பது இருப்பியல் நியதி.
இன ரீதியான, மத ரீதியான, கல்வி-பொருளாதார ரீதியான வர்க்க மற்றும் சாதி ரீதியான ஒடுக்குமுறைகள், சமூக ஒடுக்குமுறை என ஒட்டுமொத்த உலக மானிட சமுதாயம் எதிர்நோக்கும் ஒடுக்குமுறைகளைக் குறியீடாக்கி இந்தக் கலைப்படைப்பில் பேச விழைந்துள்ளோம்!
தமிழ்ச் சூழலில் பேசாப்பொருளாக மூடிமறைத்துப் பேணப்படும் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையும்- சமூக ஏற்றத்தாழ்வு சார்ந்த அநீதிகள் சிலவும் இதில் தொட்டுச் செல்லப்படுகின்றதெனினும், இந்த நடன அரங்கம் - உலகளாவிய சமூக அநீதிகளுக்கு எதிரான அம்சங்கள் பலவற்றைப் பிரதிபலிக்கின்றது. குறியீடாகவே பல விடயங்களைச் சுட்டிநிற்கின்றது.
அன்பும் வாழ்வியல் அறமும் தான் மானிட சமத்துவத்தின் அடிநாதம் என்பதையும சொல்லவிழைகின்றது!!
பறை என்பது – மனிதத்தின் குரலாக-அநீதிகளுக்கு எதிரான குறியீட்டு வடிவமாக இங்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது!!
பறை – மனிதத்தின் குரல்
PARAI- The voice of humanity
Supported by NorwayTamil Sangam
Video: Vicknakumar, Maharasasingam, Tharmavanan
Music Composer: Hariharan Suyambu
Music arrangements & recording: Sunthar Kanesan
Violin: Athisayan Suresh
Written by Rooban Sivarajah
Costume design: VarathaLadchumy
Stage arrangment: Vishnusingam Kanapathipillai
Script Theme & Choreography: Kavitha Laxmi
www.facebook.com/kalasaadhana
Year: 2017
created with
WordPress Website Builder .