பரீஸில் இம்முறை நான் சந்தித்தவர்களுள் முக்கியமான ஒருவர் கவிதா லக்ஷ்மி.
ஆற்றலும்,திறனும்,அறிவும்,தேடல் எண்ணமும் கவிதை புனையும் ஆற்றலும் மிக்க ஒரு பெண்
பண்டைய காலத்தில் நமது தமிழ் நட்டிய மகளிர் பல்திறன் மிக்கோராயிருந்தமைக்குச் சான்றுகள் உண்டு
அத்தகைய பல் திறன்கள் பெற்ற ஒரு நர்த்தகியைக் கண்டது பெரு மகிழ்ச்சி தந்தது
நோர்வே நாட்டிலிருந்து அவர் தம் கலைக் குழுவுடன் பொங்கல் விழாவுக்கு நிகழ்ச்சிகள் அளிக்க அழைக்கப்பட்டிருந்தார்.
கலாசாதனா எனும் ஓர் அமைப்பை நிறுவி நோர்வேயில் மாணவிகளுக்குப் பரதம் பயிற்றுவிப்பதுடன் நாட்டிய நாடகங்களும் செய்து வருகிறார்
ஒர் சிறந்த ஆற்றுகைக் கலைஞராகவும் இருந்து வருகிறார்
அவரது நடனங்களை பின்னர் அவரது முக நூலில் கண்டு மகிழ்ந்துள்ளேன்
லாவகமான அவரது அழகான அசைவுகளும்
ரச,பாவங்களைப் பிரதிபலிக்கும் அவரது முகமும்
ஒரு சிறந்த நர்த்தகிக்குரித்தான ஆடல் திறனும்
நம்மை வெகுவாகக் கவர்ந்தன
நிகழ்வில் அவரது கலாசாதனா மாணவிகளின் மூன்று ஆற்றுகைகள் மனதைக் கவர்ந்தன
மாணவிகள் திறமையான பயிற்சிகள் பெர்ரிருந்தனர்
ஒன்று புறநானூற்றுப் பாடல் ஒன்றை அவர்கள் நாட்டியமாக்கியிருந்தார்கள்
வழ்க்கமான சங்ககால வீரத் தாயின் கதைதான்
மற்றது கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு மதுரை எரித்த கதை
மூன்றாவது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த கனகி எனும் ஆடலரசியான தாஸி நாட்டியக்காரியின் கதை
மூன்றும் பெண்களைப் பற்றியது
மூன்றினுள்ளும் பெண்ணியக்கருத்துகள் இளையோடி இருந்தன போல எனக்குப் பட்டது
கனகிபுராணம் யாழ்ப்பாணத்தில் வண்ணார்ப்பண்னைக் கோவில் தாஸியாக இருந்த கனகி பற்றிக் கூறுவது
முதன் முறையாகக் கனகியை நான் மேடையில் காண்கின்றேன்
யாழ்ப்பாணத்து சமயம் சாரா இலக்கியங்கள் பற்றி எழுதிய பேரா.கைலாசபதி அன்று வண்ணார்ப்பண்ணைச் சிவன் கோவில்தாஸியாகவிருந்த கனகிபற்றி நட்டுவச் சுப்பையனார் எழுதிய கனகி புராணத்தை ஓர் இலக்கியமாக அறிமுகம் செய்தமை ஞாபகம் வந்தது.
என் அருகில் இருந்து இந்நாட்டியத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்த ஓவியர் மருதுவிடம் நான் இச்சேதியைச் சொன்னபோது அவர் வெகுவாகக் கவரப்பட்டு யாழ்ப்பாணக் கனகி தாஸியைக் காண ஆயத்தமானார்
துணிந்து கனகியை நாயகியாக்கி மேடையிற் கொணர்ந்த கவிதா லக்சுமிமீது நமக்கு ஓர் மதிப்புண்டாயிற்று
நாட்டிய நாடகங்களின் கருப்பொருளும் அவர் அதனை நிகழ்த்திய விதமும் அவரை ஏனைய பரத நாட்டிய ஆசிரியர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது
அவருக்கு விருது வழங்கும் வாய்ப்பை எனக்களித்தனர் விழா அமைப்பாளர்கள்
மிகுந்த மகிழ்சியுடன் நான் அவ்விருதை வழங்கினேன்
நிகழ்ச்சிகள் முடிந்த பின் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்த முகுந்தன் வீட்டில் சாவகாசமாக அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது
அவரது வேலைகளை அறிய முடிந்தது
அத்தோடு அவரது வாசிக்கும் ஆர்வத்தையும்,தேடல் நோக்கையும் அறிய முடிந்தது
எமது உரையாடலில் இந்திய தத்துவ மரபு,இந்திய நடனங்கள் அதன் பின்னாலுள்ள தத்துவப் போக்குகள் எனப் பல விடயங்கள் இடம் பெற்றன்
புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம் எனும் கதையை அவர் நாட்டிய நாடகமாக்கியிருக்கிறார்
தமிழ் இலக்கியக் காட்சிகளை நாட்டிய நாடமாகியிருக்கிறார்
குருசேத்திரம் எனும் அவரது நட்டிய நாடகம் யுத்த எதிர்ப்பு நாடகம் என அறிகிறேன்
பாரதியின் பாஞ்சாலி சபதத்தை நாட்டிய நாடகமாக்கியிருக்கிறார்
அண்மையில் தமிழ் நாட்டில் ராஜேந்திர சோழனின் 1000 ஆம் ஆண்டு விழாவில் அவனது ஆசை நாயகியாக அமைந்த பரவைநாச்சியர் பற்றி ஓர் நாட்டியம் நிகழ்த்தியிருந்தார்
அன்று தாசி கனகியை மேடையிற் கொணர்ந்தவர்
இன்று தாஸி பரவை நாச்சியைக் கொணர்கிறார்
தமிழர் நடன மரபில் நடனம் வளர்த்த்வர்கள் இந்த தேவதாஸி மரபினர்தாம்.
இவர்களையும் இவர்கள் நடனத்தையும் விட்டு விட்டு தமிழர் நடன மரபினை எழுதிவிட முடியாது
இவர்களை மீண்டும் கொணர்கிறார் கவிதா லக்சுமி
இதற்கு ஓர் புலமையும்
,துணிவும் வேண்டும்
இரண்டும் அவரிடமுண்டு
அவரது முகநூலில் புதுமைபித்தனின் கதையை அடிப்படையாக வைத்து அவர் அண்மையில் தயாரித்த சிற்பியின் ந்ரகம் பார்த்தேன்
நோர்வேயில் கிடைத்த சகல வசதிகளும் நிரம்பிய மேடையை அவர் நன்கு பயன் படுத்தியிருந்தார்
பிரமாதமான ஒளியமைப்பு.
அருமையான நடன் அமைப்பு
அவருக்கு பாடல், இசை, இசையாக்கம்,,பிரதி ஆக்கதிற்கெனச் சிறப்பான குழுவினர் அமைந்துள்ளனர்.
நோர்வேயில் பேராசிரியர் ரகுபதியின் ஆலோசனைகளும் இவருக்கு கிடைப்பதாக அறிகிறேன்
ஒவ்வொருவரது கெட்டித்தனமும் நாடகத்தில் தெரிகிறது;
அவர்களின் காத்திரத் தனமையும் தெரிகிறது
இவற்றைத் தொகுத்துப் பார்க்கையில் நம் மத்தியில் இருக்கும் நட்ன மணிகளுள் சற்று வித்தியாசமாகக் கவிதா லக்சுமி தெரிகிறார்
தெரிந்ததை அதேபோலச் செய்வது கலையல்ல.அது செய்வினையே
நம்மத்தியில் ஒன்றைப்போலப் பிரதி பண்ணுபவர்களையே நாம் கலைஞர் என்கிறோம்
கலை என்பது சிருஸ்டி
புதியன புனைவது
.சதா சிருஸ்ட்டித்துவ மனோநிலையில் இருப்பவர்களே உண்மைக் கலைஞர்கள்.அவர்களாலேயே புதியன் புனைய முடியும்.கவிதா லக்சுமியிடம் அச்சிருஸ்டி மனோநிலையினை நான் கண்டேன்,
அவர் படைப்புகளிலும் கண்டேன்
திரும்பித் திரும்பி அரைத்த மாவையே அரைத்துப் பார்வையாளரச் சலிப்படைய வைப்பவர்களாகவே நமது அதிகமான நடன ஆசிரியர்கள் இருக்கிறார்கள்
இவர்கள் மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாக கவிதா லக்சுமி தெரிகிறார்
சோராது அவர் இப்ப்ணியினை மேற் கொள்ள வேண்டும்
created with
WordPress Website Builder .