நல்லதோர் கலா அனுபவம்
ஆனையை அடக்கிய அரியாத்தை
கவிதாலக்சுமியின் கலாசாதனாவின் ஆற்றுகை
நோர்வே தமிழ்ச்சங்க வைர விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகளுள் மனம் கவர்ந்த ஓர் நிகழ்வு நோர்வே கலாசாதனா அளித்த
ஆனையை அடக்கிய அரியாத்தை என்ற வன்னிபெண்ணின் கதை
இதற்கு அவர்கள்
காலனித்துவம்- பெண்- யானை
எனப்பெயரிட்டிருந்தனர்
வேலப்பணிக்கன் ஒப்பாரி என்னும் இலக்கியம் ஈழத்தில் வன்னி நாட்டார் இலக்கியத்தில் ஒன்று
சின்னவன்னியன் என்ற வன்னித்தலைவன் குமுழமுனையை ஆண்டுகொண்டிருந்த காலம்
, பணிக்கர் என்ற அழைக்கப்பட்ட யானைபிடிக்கும் சமூகத்தின் துணையோடு ஒல்லாந்தருக்கு யானை பிடித்துக்கொடுத்தல் அன்றைய காலத்தில் வன்னித் தலைவர்களின் கடமையாக இருந்தது.
ஒருமுறை ஒரு கொம்பன் யானையைப் பிடிக்கும் வேலை வந்தது.
யாராலும் பிடிக்க முடியாதெனக் கருதப்பட்ட
யானை அது.
வேலப்பணிக்கன் என்ற ஒருவனால் முடியும் என்று வேலப்பணிக்கன் தலைமீது அப்பணி விழுகிறது.
அது வேலப்பணிக்கனாலும் முடியாது.
அது வேலப்பணிக்கள் மனைவி அரியாத்தையினாற்தான் முடியும் என்ற கிண்டலும் வருகிறது.
இதனால் துயர் அடைந்து வீடுவந்த வேலப்பணிக்கனைப் பார்த்த அரியாத்தை அவனைத் தேற்றித் தானே ஆனை பிடித்துவருகிறேன் எனக் கிளம்புகிறாள்.
கோபங்கொண்ட யானையை தன் ஆத்ம பலத்தாலும், மனோ பலத்தலும், வசியத்தாலும் அடக்கி அதன் மீது ஏறி வன்னியன் மாளிகைக்கு வருகிறாள். அவள் வீரத்தைப் பாராட்டிய வன்னியன் மனைவி அவளை கௌரவப்படுத்துகிறாள்
.
மந்திரவசியத்தால் கட்டிவந்த யானையை சில பொழுதிற்குள் வசியக்கட்டு கட்டவிழ்க்க வேண்டும் என்பது அவசியம். அதன் கட்டை அவிழ்க்குமுன்னரே அரியாத்தை உடல் சோர்ந்து பாதி வழியில் இறக்க நேரிடுகிறது. கட்டவிழ்ப்பார் யாருமின்றி யானையும் இறந்துபோகிறது.
அரியாத்தையின் பிரிவுத்துயர் தாங்காத வேலப்பணிக்கன் அவள் குறித்து ஓப்பாரி பாடுகிறான்
இறுதியில் உடன்கட்டையும் ஏறுகிறான் என்பது வேலப்பணிக்கர் ஒப்பாரியின் கதைச்சுருக்கம்
ஒப்பாரி வைப்பது வழமைபோல பெண்
இங்கோ ஆண் ஒப்பாரி வைக்கிறான்
இக்கதையில்
பெண்ணின் வீரம்
அவளது கற்பு
அவள் கணவன் மீது வைத்த அன்பு அவன் மனைவிமீது வைத்த அன்பு என்பனவே பிரதானப்படுத்துள்ளமை தெரிய வருகிறது
மரபுரீதியாக இக்கதைக்கு அளிக்கப்பட்ட வியாக்கியானதிலிருந்து மாறி
பின் காலனித்துவ நோக்கில் இதற்கு இன்னோர் வியாக்கியானமளித்து உருவாக்கப்பட்டதே காலனியம் பெண் யானை என்ற தலைப்பில் கவிதாலக்சுமி அளித்த இந்த ஆற்றுகை
யானை அன்று ஓர் பெரும் வியாபாரப்பொருள்
இந்த யானையைப்பிடித்து ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிக்கின்றனர் ஆட்சி செய்த அந்நியரான ஒல்லாந்தர்
காலனித்துவத்தின் குறிக்கோள் சுரண்டல்தானே
இந்த வியாபாரப் போட்டிக்குள் ஒரு குறு நில மன்னனும்
யானை பிடிக்கும் பணிக்கர் குழுவும்,
ஒரு பெண்ணும் சிக்கிகொண்டமையைக் கூறும் ஆற்றுகையாக இதனை உருவாக்கியுள்ளார் கவிதாலக்சுமி
ஒரு கதையை அப்படியே போடுவது ஒரு வகை
அதற்கு மறுவியாக்கியானமளித்துப்போடுவது இன்னொருவகை
இது வேலப்பணிக்கன் ஒப்பாரி பற்றி இன்னொரு வியாக்கியானம்
இது பற்றி முன்னொருமுறை காக்கைச் சிறகு எனும் சஞ்சிகையில் கவிதாலக்சுமி ஓர் அருமையான கட்டுரையும் எழுதியிருந்தார்
கவிதா லக்சுமியை இற்றைக்கு 5 ஆண்டுகளுக்கு முன் பரீஸில் சந்தித்தேன்
அங்கு நடந்த பொங்கல்விழா ஒன்றுக்கு நிகழ்வுதர தன் குழுவினருடன் நோர்வே இருந்து வந்திருந்தார்
அவர் மாணவிகளின் ஆற்றுகை பார்த்தேன்
நாட்டியக் கருப்பொருளில் வழமையிலிருந்து மாறுபட்டு ,
சங்க இலக்கியம்,
கனகி புராணம்
என அவர் நிகழ்வுகள் காணப்பட்டமை அவர் வழமையான நமது பரத நர்த்தகிகளிலிருந்து மாறுபட்டுச்செல்கின்றார் என்பதனைக் காட்டியது
அந்நிகழ்வுகள் அருமையாகவும்
இன்னொருவித கலா அனுபவம் தருவனவாகவும் அமைந்திருந்தன.
அவருடன் உரையாடியபோது
அவர் நல்ல வாசகர்
எழுத்தாளர்
கவிஞர்
எனவும் தெரிய வந்த து
கண்ணன்-- ராதை
முருகன் -வள்ளீ
சிவன்- சக்தி
புராணம் - இதிகாசம்
என செல்லும் பரத மரபுவழி நின்று மாறி இன்னொரு திசையில் பரிணமித்த அந்த இளம் நாட்டியக் கலைஞி மீது மீது வாஞ்சையும் மதிப்பும் நம்பிக்கையும் வந்த து
மரபிலிருந்து வேறுபட்டுச் செல்ல
அசாத்திய துணிவு வேண்டும்
அதுவும் நம் சமூகத்தில் அக்கலைஞர் பெண்ணாயிருந்தால்
துணிவு இன்னும் பல மடங்கு தேவை
துணிச்சலுடன் தான் வரித்த பாதையில் பிரயாணம் செய்கிறாள் இப்பெண்
இந்த வேலப்பணிக்கன் ஒப்பாரி பெரிய அளவில் மேடையேறவுள்ளதாக அறீகிறேன்
.
அதன் ஒரு சிறுபகுதியே
தமிழ்சங்க ஆண்டு விழாவில் மேடையேறியது
கவிதா லக்சுமி ஆக்கங்களில் எனக்குப் பிடித்த அம்சங்கள் மூன்று
ஒன்று
அவரது நடனச் செம்மையும் ஒழுங்கும் அந்த ஒழுங்கில் வெளிப்படும் அழகும்
இது ஓர் கலைத் தன்மையை நிகழ்வுக்குத் தரும்
இரண்டு
அவர் எடுத்துக்கொள்ளும் கதைக்கரு
வழமையான புராண இதிகாசங்களினின்று இது வேறுபட்டு நிற்கும்
மூன்றாவது
அவர் அவற்றிற்கு அளிக்கும் புது வியாக்கியானம்
இது அப்படைப்புக்கு ஓர் கனதியைக் கொடுக்கும்
இதற்கு பரத நடனத் தாடனமும் பன்நூற் பயிற்சியும் வேண்டும்
இம்முறை நோர்வேயில் கவிதாலக்சுமியின் வீட்டில் நான் நின்றபோது அவரது வீட்டு நூல் நிலையத்தையும் கண்டேன்
நல்ல நூல்கள் அதில் காணப்பட்டன
அவரோடும் அவர் கணவரோடும் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது
அவர் கணவர் ரவியும் தேர்ந்த வாசகரும் கலைஞருமாவர்
பேராசிரியர் ரகுபதியிடம் கவிதாலக்சுமி அங்கு தொல்காப்பியத்துடன்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சங்க இலக்கியம் முதலான இலக்கியங்களையும்படிப்பதையும் அறிந்து கொண்டேன்
எத்தனை மகிழ்ச்சி
அது தமிழ் இலக்கிய மரபில் தாடனம் கொள்ள அவருக்கு உதவும்
தமிழ்சங்க வைரவிழாவில் மேடையேறிய ஆனையை அடக்கிய அரியாத்தை நடன நாடகத்தின் சிறு துண்டு அப்பெரு நாடகத்தைக் காணும் பேரவாவையும் ஏற்படுத்தியது
நடித்த மாணவிகளின்
துடிப்பு வேகம் அசைவு என்பனவும்
அவர்களின் உடை அலங்காரமும்
அத்ற்கான கோறியோகிராபியும் மனம் கவர்ந்தன
15 நிமிட நேரம் நல்லதோர் கலா அனுபவம்
கானைத்துவம்- பெண்- யானை என்றபெயரில் தமிழ்சங்க வைரவிழாவில் மேடையேறிய கவிதாலக்சுமியின் இப்படைப்பு
வாழ்த்துகள்
தயாரித்த த்மிழ்சங்கத்திற்கும்
நெறியாளகை செய்த கவிதாலக்சுமிக்கும் ஆற்றுகை செய்த அச்சிறுமிகளுக்கும்.
created with
WordPress Website Builder .