Everyone who is born as a human being has always dreamed into a new world of fantasy. It is in such a dream moment. Barathi flies from world to world full of imagination. Such a worldof imagination is "wisdom". As his soul seeks a better life, "he" is the hero of history. His wisdom seeks the most magnificent moments of life.
Is it peace? - Is that truth? - Is it ethics and morality? - Or is it love and joy?
To be able to create this dance drama by Bharathi's "Journey of wisdom", we have used his poems that fit best to the action.
நடன நாடகம்
ஞானரதம்
சாந்தியா? உண்மையா? தர்மமா? அல்லது காதலும் இன்பமுமா? மனித மனங்கள் எதைத் தேடியலைகின்றன? மண்ணுல யதார்த்தத்தில் இவையெல்லாம் கிடைத்துவிட்டால் மனதின் தேடல் தீர்ந்திடுமா என்ன? இந்தக் கேள்விகளைச் சுமந்துகொண்டு ஐந்து உலகங்களை உருவாக்குகிறான் பாரதி! வாழ்வின் உன்னத கணங்களைத் தேடிப் புறப்படுகிறது அவன் ஞானரதம். ஞானரதம் வெளிவந்த காலத்தில் அது தமிழ்இலக்கியத்தில் புது முயற்சி. அவனது ஒவ்வொரு கற்பனையுலகும் பல உயர்ந்த தத்துவங்களை நமக்குக் கற்றுத் தருகின்றன.
அவனுடைய படைப்புகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒரு சமயம் கதை எழுதிவிட்டு அதை பாடலாக ஆக்கியிப்பான். மற்றொரு சமயம் எழுதிய பாடலை உரைநடை வடிவிலும் கதை வடிவிலும் புனைந்திருப்பான். பாரதியின் கவிதைகளைப் படிக்கும் போது ஞானரதத்தை அவன் அவனுடைய கவிதைகளுக்குள்ளும் ஓட்டித் திரிந்துள்ளதை நாம் தெரிந்து கொள்ளலாம். ஞானத்தின் தேடலில் ”நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்” என்று பாரதியே ஒரு கனவுக் கவிதையில் கூறுகின்றான்.
ஞானரதத்தை நடன நாடகமாக்கும் வடிவமைப்பிற்கு அவனுடைய பாடல்களிலிருந்தே பொருத்தமானவற்றைத் தெரிந்தெடுத்துள்ளோம்.
தேடல்... ஆத்மத் தேடல்...
மனிதப் பிறவியில் ஆத்மாவைத் தேடும் உணர்வினைச் சொல்லல் எளிதாமோ என்ன?
கற்பனையின் உச்சம் ஞானரதம்.
Story, Lyrics and Theme: Subramania Bharathi
Choreography & Direction : Kavitha Laxmi, Dishanthi Thavendran
Stage dialogs Staging script: Rooban Sivarajah, Ilawalai Wijenthiran, Kavitha L
Composer: Ashwamithra
Costume design: Varathalachumy Vigneswaran
Scenography: Karikalan Kathir, Vishnusingam
Videography: Vicknakumar Mahesan
Staged: 2018 - Oslo - Norway
Production @Kala Saadhana
created with
WordPress Website Builder .