ஒரு கலைவடித்தினூடாக நாம் கொண்டுவரும் பேசுபொருள் எப்போதும் ஒன்றாகத்தான்
இருக்கவேண்டும்
என்று இல்லை. ஆடற்கலை பற்றிய ஆத்ம தேடலின் அனைத்து
உணர்வுகளையுமே கட்டுமானம் சிதறாமலும், மரபு குன்றாமலும், இசைக்கும் பொருளுக்கும் ஏற்ப ஆடலாம் என்ற சுதந்திர எண்ணத்தை கலாசாதனா கலைக்கூடம் கொண்டிருக்கிறது.
பரதக்கலையின் பேசுபொருளை அகலப்படுத்தி, மனித மனத்தின் ஆத்மார்த்தமான எல்லாத் தேடல்களுமே உயர்ந்த தன்மை கொண்டவையெனும் பரிமாணத்திற்கு நாட்டியக்கலையில்
பேசுபொருளை எடுத்துச்செல்லவேண்டுமென்ற நோக்குடன் கலாசாதனா கலைக்கூடம் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
உலக இலக்கிங்களிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட கருப்பொருட்களை அரங்கப் படைப்பாங்கங்களாக உருவாக்கி வருகின்றது.
புத்தாக்கமும் கலைத்துவமும் அழகியலும் நேர்த்தியும் காட்சியின்பமும் கொண்ட படைப்புகளை உருவாக்குவதில் பிரக்ஞை கொண்டுள்ளது
கலை நிகழ்த்துகைகள் மனிதத்துவத்தை அடிநாதமாகக் கொண்டிப்பதை முக்கியத்துவமாகக் கருதுகின்றது.
தமிழ்ச் சிந்தனை மரபினை உள்ளடக்கிய தமிழ்வழி ஆடலினை ஒர் செயற்திட்டமாக முன்னெடுத்து வருகின்றது.
சமூகத்தை முன்னிறுத்திய கருப்பொருளும் சிந்தனையும் பிரதிபலிப்பிற்கும் முன்னுரிமை கொடுக்கின்றது
INTERNATIONAL PLATFORM
London, Denmark, London,France
SriLanka, India, USA
WORKSHOPS
London, USA
DANCE DRAMA PRODUCTIONS
Gnanaratham - 2018
Parai - 2017
Sirpiyin Naragam - 2016
Kurushethram - 2014
Sivakamiyin Sabhatham - 2011
Ramayanam - 2008
Kannakiyum Kannamavum - 2006
THEMATIC PRESENTATIONS
Buddha
Women in Tamil Literature Arangetram
Bharathi Poetry Arangetram
Poetry in Motion
11 dance forms of Natyam
created with
WordPress Website Builder .